நம்பிக்கை இல்லாத இடத்தில் எப்படி தொடர முடியும்? காங்கிரஸில் இருந்து விரைவில் விலகுவேன்.. அமரீந்தர் சிங்..!

By vinoth kumarFirst Published Sep 30, 2021, 4:12 PM IST
Highlights

சித்து ஒரு முதிர்ச்சியற்ற நபர். அவர் ஒரு நிலையான எண்ணம் கொண்ட மனிதர் அல்ல என்று நான் மீண்டும் மீண்டும் கூறினேன். அவர் ஒரு அணிக்கு ஏற்ற தலைவர் அல்ல. 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலிதளம் அல்லாமல் மேலும் மற்றொரு முன்னணி உருவாகலாம் என முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு உச்சத்தை எட்டியது. இதனையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து, டெல்லி சென்ற அமரீந்தர் சிங் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார். இதனால், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமரீந்தர் சிங்;- இதுவரை நான் காங்கிரஸில் இருக்கிறேன். ஆனால் நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். நான் ஏற்கெனவே எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன் எனக் கூறினார். நான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு சொந்த நம்பிக்கைகள், சொந்த கொள்கைகள் உள்ளன. நான் நடத்தப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது.  50 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் என்னை சந்தேகித்தால், என் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்தால் என்ன செய்வது? நம்பிக்கை இல்லாவிட்டால், நான் கட்சியில் இருப்பதன் பயன் என்ன? 

நான் இந்த விதத்தில் நடத்த இனிமேலும் அனுமதிக்க மாட்டேன் என்று காங்கிரஸுக்கு எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளேன். அதற்காக நான் அத்துடன் நிற்க மாட்டேன். நான் காங்கிரஸில் இருந்து இதுவரை விலகவில்லை. ஆனால், நம்பிக்கை இல்லாத இடத்தில் ஒருவர் எப்படி தொடர முடியும்? நம்பிக்கை இல்லாதபோது ஒருவர் தொடர முடியாது. அமித் ஷாவைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் உட்பட அனைவரும் என்னிடம் எழுப்பும் கேள்வி நான் பாஜகவில் சேருவேனா என்பதே. நான் பாஜகவில் சேரவில்லை. நான் காங்கிரஸில் இருந்து இதுவரை விலகவில்லை ஆனால், நான் விரைவில் ராஜினாமா செய்வேன். நான் இரண்டாவதாக முடிவுகளை எடுக்கும் நபர் அல்ல.

சித்து ஒரு முதிர்ச்சியற்ற நபர். அவர் ஒரு நிலையான எண்ணம் கொண்ட மனிதர் அல்ல என்று நான் மீண்டும் மீண்டும் கூறினேன். அவர் ஒரு அணிக்கு ஏற்ற தலைவர் அல்ல. ராகுல் காந்தி கட்சிக்கு இளம் ரத்தத்தை கொண்டு வர விரும்புகிறார். அதனால் பழைய தலைவர்களின் ஆலோசனையை கேட்க மறுக்கிறார். கட்சியில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸுக்கு அழிவு ஏற்படும் என்றார். 

click me!