
எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவிடாமல் தடுத்தவர்களுக்கு பாடம் காட்ட இந்தத் தொகுதியில் போட்டியிடும் ஒரு இளைஞரை நான் ஜெயிக்க வெச்சி காட்டுறேன் என்று விஷால் சபதம் செய்தார்.
இந்தத் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நான் தேர்தலில் போட்டியிட வந்தேன். ஆனால், என்னைப் போட்டியிட விடாமல் தடுத்துவிட்டனர். எனவே, இந்தத் தொகுதியில் ஒரு இளைஞரை ஜெயிக்க வைச்சிக் காட்டுறேன் என்று ஆவேசமாகக் கூறினார் விஷால்.
நடிகர் விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அவர் சில போராட்டங்களை நடத்தி, ஆடியோ ஒன்றை சமர்ப்பித்து, பின்னர் தேர்தல் அலுவலர் அவரது வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்தார்.
பின்னர் திடீரென அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டது ஏன் என்று, தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்தார். விஷாலை முன்மொழிந்த 10 பேரில் நாங்கள் முன்மொழியவில்லை என 2 பேர் நேரில் விளக்கம் அளித்ததாகக் கூறினார் தேர்தல் அலுவலர் வேலுசாமி.
இதனிடையே தன் வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அலுவலர் கூறியது வீடியோவாக என்னிடம் உள்ளது என்றார் விஷால். அதாவது,தனது வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அலுவலர் கூறியது வீடியோவாக தன்னிடம் உள்ளது என்று கூறிய விஷால்,
படத்தில் நடக்கும் காட்சிகளைப் போல் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் ஏற்பட்டதாகக் கூறினார். மேலும், தான் போட்டியிடுவதில் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என நினைக்கவில்லை, என்ன நடக்கிறது என்று புரியவில்லை
என்று சோக மயமாக விஷால் செய்தியாளர்களிடம் பேசினார்.
என்ன நடக்கிறது என்று புரியவில்லை... மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்தால் இதுதான் கதியா? என்று கேட்ட விஷால், படத்தில் நடக்கும் காட்சிகளைப் போல் திகில் திருப்பமாக இருக்கிறது என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டே சொன்னார். பின் என்ன வந்ததோ... ஆவேசமாக, எனக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டால் என்ன? இந்த தொகுதியில் போட்டியிடும் ஒரு இளைஞரை, சுயேட்சையாகப் போட்டியிடும் ஒரு இளைஞரை விஷால் ஜெயிக்க வெச்சிக் காட்டுவான். நான் ஜெயிக்க வைப்பேன் என்று சபதம் செய்தார்.
விஷாலின் சபதத்தால் அதிமுக.,வினர் மட்டுமல்ல, திமுக., வட்டாரமும் சற்று திகிலடைந்துதான் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!