அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன்..! மக்களுக்காக முதல்வராகவும் ஆவேன்..! கமல்ஹாசன் உறுதி..!

Asianet News Tamil  
Published : Sep 22, 2017, 07:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன்..! மக்களுக்காக முதல்வராகவும் ஆவேன்..! கமல்ஹாசன் உறுதி..!

சுருக்கம்

I will definitely come to politics I am the Chief Minister for the people Kamal Haasan confirmed ..

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் மக்களுக்காக முதல்வராக விரும்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கமல்ஹாசன், அரசியலுக்குள் நுழைவது என்பது முள்கிரீடத்தை தலையில் சுமப்பது போன்றது என்றார்.

மக்களைப் பொருத்தவரையில், தங்களை யாரையும் கண்டுகொள்ளவில்லை என்றே நினைக்கின்றனரே தவிர இடதுசாரியா வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவர்களா என்றெல்லாம் மக்கள் பார்ப்பதில்லை என்றார்.

அரசியல் ஒரு புதைகுழி என்ற நிலையை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக இருக்கிறது.

அரசியல்வாதி ஆவதற்கு முன் என்னை நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக மக்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். மக்கள் சந்திப்பு பயணம் தொடர்பான விவரங்களை விரைவில் அறிவிப்பேன். மக்களின் ஆதரவு இல்லாமல் எதையுமே செய்யமுடியாது. உடனே பெரிய மாற்றத்தை கொண்டுவருவேன் என்று கூற இயலாது. ஆனால் மாற்றத்திற்கு தலைவணங்குகிறேன்.

மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கும் கீழே இறங்கிச் செல்ல தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதன்மூலம் விரைவில் அரசியலுக்கு வந்து, கட்சி தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற உள்ளதை கமல் உறுதிப்படுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!