ஜீரோ தொகுதியை ஹீரோ தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.. திமுகவை அல்லுதெறிக்கவிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ்.

Published : Mar 15, 2021, 01:16 PM IST
ஜீரோ தொகுதியை ஹீரோ தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.. திமுகவை அல்லுதெறிக்கவிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ்.

சுருக்கம்

ஜீரோ தொகுதியை ஹீரோ தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் என துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் உறுதியளித்தார். சென்னை கொத்தவால்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் துறைமுகம் தொகுதி தேர்தல் பணிமனை திறக்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.   

ஜீரோ தொகுதியை ஹீரோ தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் என துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் உறுதியளித்தார். சென்னை கொத்தவால்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் துறைமுகம் தொகுதி தேர்தல் பணிமனை திறக்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரச்சாரத்தில் தீவிரம்காட்ட தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் அதிமுக கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஒன்றான பாஜக அதிமுக கூட்டணியில்  20 தொகுதிகள் பெற்று தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சியின் தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் துறைமுகம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில் சென்னை கொத்தவால்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் துறைமுகம் தொகுதியின்  தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. அதில அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா,பாஜக மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ், 

அதிமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். கடந்த பத்தாண்டுகளில் மின்வெட்டு, ரவுடியிசம், குடிநீர் பிரச்சினை என எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. துறைமுகம் தொகுதி மக்களை இலவசத்திற்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது திமுக. தற்போது தமிழகத்தின் ஜீரோ தொகுதியாக இருக்கும் துறைமுகம் தொகுதியை ஹீரோ தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் என தெரிவித்தார். இங்கு திமுக சார்பில் சேகர்பாபு களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார்..! காங்.க்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும்..! பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்
அன்புமணியை வளைத்துப்போட்ட இபிஎஸ்..! அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள்..?