மீண்டும் முதல்வராக வருவேன்... எதிர்காலத்தில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவேன்... எடப்பாடி பழனிசாமி உறுதி..!

Published : Feb 11, 2021, 04:24 PM IST
மீண்டும் முதல்வராக வருவேன்... எதிர்காலத்தில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவேன்... எடப்பாடி பழனிசாமி உறுதி..!

சுருக்கம்

தமிழகத்தில் அரசியல் லாபத்திற்காக ஒரு சிலர் மதப்பிரச்சினையை எழுப்பி வருகின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில் அரசியல் லாபத்திற்காக ஒரு சிலர் மதப்பிரச்சினையை எழுப்பி வருகின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் ரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டி வைத்ததாகவும், அடுத்த முறை முதலமைச்சராக வந்து தானே அந்த திட்டத்தை தொடங்கி வைப்பேன் என்றார். விவசாயிகளின் இன்னல்களை போக்கவே விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு நீர்வளம் பெருக்கப்பட்டுள்ளது. ஏழை தொழிலாளர்கள், கான்கிரீட் வீடு வழங்கப்படுகிறது. இனிமேல் வீடு இல்லாத தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

இலவச மின்சாரம் கேட்டு பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, ஆட்சியில் இருந்த திமுக, விவசாயிகளை சுட்டு கொன்றது.  திமுக வாரிசு கட்சி. குடும்ப கட்சி. முதலில் கருணாநிதி, தற்போது ஸ்டாலின், அடுத்து உதயநிதி என குடும்ப அரசியல் செய்து வருகின்றனர் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். எதிர்காலத்தில் திமுக இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். 

திமுக ஆட்சியில் மின் வெட்டு இருந்தது. அதனை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம். அதன் விளைவாக உலக தொழிலதிபர்கள் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை தேடி வருகின்றனர்.  3 மாதத்தில் முதல்வராக வருவேன் என ஸ்டாலில் சொல்கிறார். எப்படி வரமுடியும் . மக்கள் வாக்களித்தால் மட்டுமே முடியும் என முதல்வர் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!