ஜெயலலிதா இருக்கும் போதே ஓரம்கட்டப்பட்டவர் தான் இந்த சசிகலா... சரவெடியாய் வெடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!

Published : Feb 11, 2021, 03:59 PM IST
ஜெயலலிதா இருக்கும் போதே ஓரம்கட்டப்பட்டவர் தான் இந்த சசிகலா... சரவெடியாய் வெடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!

சுருக்கம்

சசிகலா அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது என்பது சட்டரீதியாகவும் நடைபெறாத ஒன்று என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சசிகலா அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது என்பது சட்டரீதியாகவும் நடைபெறாத ஒன்று என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்துள்ள உய்யாலிகுப்பத்தில் ரூ16.80 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி தான் அமமுக. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஓரங்கட்டினார். 

கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற ஜெயலலிதாவின் கட்டளையின் படி மன்னிப்பு கேட்ட பிறகு தான் அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். சசிகலா அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது என்பது சட்டரீதியாகவும் நடைபெறாது. அதிமுக அலுவலகம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. அவருடைய சொத்துகள் அனைத்தும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தம். 

அமமுகவுடன் கூட்டணி அமைப்போம் என பிரேமலதா கூறியது அவரது விருப்பம். அதற்காக தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லை என சொல்ல முடியாது. பாமக, தேமுதிக மற்றும் பாஜக தொடர்ந்து கூட்டணியில் இருக்கும். அமமுக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம். எந்த கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!
EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?! மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை" என பறக்கும் மீம்ஸ்.!