முதலமைச்சர் கொடுத்த பட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்... மு.க.ஸ்டாலின்...!

By vinoth kumarFirst Published Dec 7, 2020, 1:37 PM IST
Highlights

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என ரஜினி அரசியல் வருகை குறித்து ஸ்டாலின் பதிலளித்துள்ளார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கி கொள்கை அறிவித்தவுடன் பதில் கூறுகிறேன்.

நான் அறிக்கை நாயகன் என்றால் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊழல் நாயகன் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- ஆளுங்கட்சியின் ஊழல், தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவதுதான் எதிர்க்கட்சியின் பணி. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. 

மேலும்,டெல்லியில் போராடும் விசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும். புதிய வேயாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றார். குடிமராமத்து பணியில் அரசு சாதனை செய்யவில்லை ஊழல்தான் செய்து வருகின்றனர். சாதிவாரிய புள்ளிவிவரத்திற்கு ஆணையம் என்பது அரசியல் நாடகம் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

ரஜினி அரசியல் கட்சி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினிகாந்த் கட்சி தொடங்கி கொள்கை அறிவித்தவுடன் பதில் கூறுகிறேன். தமிழருவி மணியனை தவறாக சேர்த்துக் கொண்டோமோ என்று ரஜினி யோசிப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் கொடுத்த அறிக்கை நாயகன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன். நான் அறிக்கை நாயகன் என்றால் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊழல் நாயகன் என்று விமர்சனம் செய்துள்ளார். 

click me!