தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகாவில் இருந்து பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. பெங்களூரு சென்றிருந்தபோது ஸ்டாலின் காவிரி நீர் குறித்து ஏன் பேசவில்லை.
நீட் தேர்வு, காவிரி விவகாரங்களில் திமுக பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- 1989ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. பெண் என்றும் பாராமல் கொடூரமான முறையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் நடந்தபோது நானும் சட்டப்பேரவையில் இருந்ததால் அந்த முறையில் இதைக் கூறுகிறேன். ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த கொடுமையை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார்.
undefined
முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான செய்தியை வெளியிடுகிறார். சம்பவமே நடக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் உண்மையை மறைக்கிறார். பொய்யான தகவலை தரும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் தருவார்கள். நீட் தேர்வு, காவிரி விவகாரங்களில் திமுக பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒருநாளாவது நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கிறதா திமுக? நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக ஏன் குரல் கொடுக்கவில்லை? கேள்வி எழுப்பினார். ஆனால், காவிரி நதிநீர் பிரச்சினையின்போது நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தது அதிமுக.
விவசாயிகள் மீது ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகாவில் இருந்து பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. பெங்களூரு சென்றிருந்தபோது ஸ்டாலின் காவிரி நீர் குறித்து ஏன் பேசவில்லை. காவிரி நீரை பெற பெங்களூரு கூட்டத்தில் ஸ்டாலின் நிபந்தனை விதிக்காது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அனைவருக்கும் சொந்தமான நாட்டின் பெயரில் கூட்டணியின் பெயரை வைக்க அவர்களுக்கு உரிமையில்லை என இபிஎஸ் கூறியுள்ளார்.