சசிகலாவுடன் பேசியதால் நான் நீக்கப்படவில்லை.. காரணம் இதுதான்? உண்மையை போட்டுடைத்த அதிமுக பிரமுகர்..!

By vinoth kumarFirst Published Jul 4, 2021, 10:58 AM IST
Highlights

உண்மையாக உழைத்தாலும், என்னை போன்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட அதிமுகவில், தேர்தல் வாய்ப்பு மட்டுமின்றி, கட்சிப்பதவி கூட, மெஜாரிட்டி சமுதாயத்தினருக்கே வழங்கப்படுகிறது. ஆனால் ஈரோடு மாவட்ட திமுகவில், மைனாரிட்டி சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது.

சசிகலாவிடம் பேசியதற்காக, நான் அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லை என்று செங்கோட்டையனுக்கு வலது கரமாக இருந்த சிந்து ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிந்து ரவிச்சந்திரன். சசிகலா சிறை செல்வதற்கு முன்னதாக செங்கோட்டையன் அமைச்சராக்கப்பட்டதற்கு சிந்து ரவிச்சந்திரன் பங்கு அதிகம் என்றும் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு செல்வாக்குடன் இருந்த சிந்து ரவிச்சந்திரன், அமைச்சர் செங்கோட்டையனுடன் எப்போதும் வலம் வருபவர். இதன் பிரதிபலனாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிந்து ரவிச்சந்திரன் மாநில வர்த்தக அணிச் செயலாளர் எனும் பதவிக்கு கொண்டு வரப்பட்டார்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவும் சிந்து ரவிச்சந்திரன் பெரு முயற்சி மேற்கொண்டார். இவருக்கு பெருந்துறை அல்லது ஈரோடு மாநகருக்குள் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சிந்து ரவிச்சந்திரனுக்கு சீட் இல்லை என்று கூறிவிட்டது. தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணமே செங்கோட்டையன் தான் என்று ரவிச்சந்திரன் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். 

இந்நிலையில், சிந்து ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில், சசிகலாவிடம் பேசியதாக, அதிமுகவில் இருந்து நான் நீக்கப்படவில்லை. ஸ்டாலின் தலைமையில், திமுகவில் இணைய அனுமதி பெற்றதால் நீக்கப்பட்டேன். அதிமுகவில், 1989 முதல், 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். என்னுடன் சமகாலத்தில் அரசியலில் பயணித்த பலர், எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் அமைச்சராகியுள்ளனர். 

உண்மையாக உழைத்தாலும், என்னை போன்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட அதிமுகவில், தேர்தல் வாய்ப்பு மட்டுமின்றி, கட்சிப்பதவி கூட, மெஜாரிட்டி சமுதாயத்தினருக்கே வழங்கப்படுகிறது. ஆனால் ஈரோடு மாவட்ட திமுகவில், மைனாரிட்டி சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. என்னுடைய களப்பணிக்கு, எதிர்காலத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திமுகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

click me!