டிடிவி.தினகரன் எப்படிப்பட்டவர் தெரியுமா? புட்டு புட்டு வைத்த திமுகவில் இணைந்த பழனியப்பன்..!

Published : Jul 04, 2021, 10:02 AM IST
டிடிவி.தினகரன் எப்படிப்பட்டவர் தெரியுமா? புட்டு புட்டு வைத்த திமுகவில் இணைந்த பழனியப்பன்..!

சுருக்கம்

அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி மக்கள் ஏற்றுக்கொண்ட விரும்பிய தலைவராக இருக்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை நல்லாட்சி மூலம் முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். 

எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படாமல், உழைப்பதற்காக மட்டுமே திமுகவில் இணைந்ததாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

அமமுக துணைப் பொதுச் செயலாளரும், டிடிவி.தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த பழனியப்பன் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.  இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பழனியப்பன்;- அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி மக்கள் ஏற்றுக்கொண்ட விரும்பிய தலைவராக இருக்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை நல்லாட்சி மூலம் முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். தற்போதய திமுக ஆட்சிக்காலம், தமிழ்நாட்டின் பொற்காலம் ஆக மாறி இருக்கிறது. மாநிலத்தின் உரிமைகள் மீட்கப்படும் என்று திமுகவில் இணைத்துக் கொண்டேன். 

அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் மிக்க தலைவராக ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார். எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. உழைப்பதற்காக மட்டுமே திமுகவில் இணைந்து இருக்கிறேன். அமமுகவில் இருந்து விலகியதற்கு மனக்கசப்பு காரணம் ஏதுமில்லை. டிடிவி.தினகரன் ஒரு நல்ல மனிதர் அது மட்டுமே சொல்ல முடியும் என பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!