
அதிமுக கட்சி ஓ.பி.எஸ் அணி சசிகலா அணி, தீபா அணி என மூன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓ.பி.எஸ் க்கு இயக்குனரும் நடிகருமான சுந்தரராஜன் மற்றும் சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுகவை யார் கைப்பற்ற வேண்டும் என்பது குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்ததையடுத்து ஓ.பி.எஸ் மக்களிடையே நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்.
மேலும் தீபா பேரவையில் ஆரம்பமே குழப்பமாக உள்ளதால் தீபா ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஓ.பி.எஸ் பக்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.