
தமிழக மக்களின் உணர்வு மிக்க ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த அனுமதி வழங்கியதற்கு, பிரதமருக்கு நன்றியை தெரிவித்ததாக கூறி , தமிழக முதல்வர் பழனிசாமி தன் உரையை தொடங்கினார்
மேலும் பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முன் வைத்துள்ளதாகவும், நிறைவேற்றப்பட வேண்டிய பல கோரிக்கைகள் அடங்கிய மடலை, பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை :
தமிழகத்தில் , எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் கோரிக்கை வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி .
மற்ற கோரிக்கைகள் :
நிலுவையில் உள்ள ரூ 17,333 கோடியை விடுவிக்க வேண்டும்
புயல் நிவாரண நிதியாக ரூ 39,566 கோடி தேவை
வர்தா புயல் நிவாரணத்தொகையாக ரூ 22, 573 கோடி
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்
வறட்சி நிவாரண நிதி கோரிக்கை
அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் .
\