இப்போதும் சொல்கிறேன்.. நீட் திரும்ப பெறும்வரை திமுக விடாது.. அடித்து சொல்லும் அழகிரி.

Published : Feb 08, 2022, 01:42 PM IST
இப்போதும் சொல்கிறேன்.. நீட் திரும்ப பெறும்வரை திமுக விடாது.. அடித்து சொல்லும் அழகிரி.

சுருக்கம்

மோடி அரசாங்கம் மக்கள் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம் நடத்தப்படுகிறது ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கேள்வி கேட்கப்படுகிறது எனவே படிப்பது ஒன்றும் எழுதுவது ஒன்றாக உள்ளது.  

சென்னை மாநகராட்சி  கோட்டூர் பகுதி 170 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் முத்தழகனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரையின் போது அதிமுக மற்றும் பாஜகவை விமர்சனம் செய்தும், நீட் தேர்வின் பாதகங்களை எடுத்துரைத்தும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, வேட்பாளர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழன் ஆகியோருக்கு ஆர்த்தி எடுத்து, மாலை அணிவித்து, மலர்களை தூவி, மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து, சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி, இந்த தேர்தலில் என்னுடைய கூட்டணி வெல்லும், எங்களுடைய கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். எங்கள் கூட்டணியை ஸ்டாலின் முறையாக வழிநடத்துகிறார். தமிழகம் முழுவதும் ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடுகிறது. கொள்கைக்காக யாரோடும் ஜனநாயக ரீதியில் போராடும் கூட்டணி இது. இந்த தொகுதியில் முத்தழகன் கை சின்னத்தில் நிற்கிறார். மக்களை மதம் சாதி என்ற அடிப்படையில் கொண்டு பிரிக்க கூடாது. மனித இனத்தில் இருக்கும் அனைவரையும் இந்தியராகவும். மாநிலத்தில் உள்ளவர்களை தமிழர்களாக பார்க்கவேண்டும். பாஜகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் நீட்க்கு எதிராக உள்ளது. அரசியலுக்காக நீட் வேண்டாம் என சொல்லவில்லை, மாணவர் நலனுக்காக வேண்டாம் என்கிறோம். மோடி அரசாங்கம் மக்கள் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம் நடத்தப்படுகிறது ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கேள்வி கேட்கப்படுகிறது எனவே படிப்பது ஒன்றும் எழுதுவது ஒன்றாக உள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் வேளாண் சட்டத்தை கொண்டுவந்தார்கள் இதை எதிர்த்து விவசாயிகள் இரவு பகலாக சாலையில் போராட்டம் நடத்தினார்கள் மேலும் காந்தி வழியில் நடத்தப்பட்டது அந்தப் போராட்டம் மட்டும்தான் இதனால் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் சட்டத்தைத் திரும்பப் பெற்றார். வேளாண் சட்டம் எவ்வாறு திரும்பப்பெறப்பட்டது அதேபோல் நீட் சட்டமும் மீண்டும் திரும்ப பெறப்படும் அது வரை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஓயாது 
என அவர் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் புதிய ஓய்வூதிய திட்டத்தின் லட்சணமா..? உடனே வெளுத்த சாயம்.. தலைமறைவான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்..!
திமுக கூட்டணிக்குள் பாமக ராமதாஸ்..? அது இப்போது முடியாது... போட்டுடைத்த விசிக வன்னி அரசு..!