
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பின்னர், வெளியே வந்த தீபா, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் தன்னை குண்டர்கள் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார். மேலும், காலை முதல் தன்னை, தீபக் போன் செய்து அழைத்தார். இங்கு வந்தேன் என கூறினார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை கமிஷனர் சரவணன், தீபா மற்றும் மாதவனை சமாதானம் செய்து, அங்கிருந்து புறப்படும்படி கூறினார். அவருடன் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“உங்க சட்டத்தை நீங்க செய்ங்க... இங்க நிக்கிற எங்கக்கிட்ட பேசாதீங்க..” என்று தீபா துணை கமிஷனர் சரவணனிடம் கூறினார்.
அதற்கு, “சட்டத்தை பற்றி நீங்கள் சொல்லி தரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பேச்சில் நிதானம் தேவை. எதை சாதாரணமாக பேசதீங்க. நீங்க லேடீசா இருப்பதால சும்மா விடுறோம்...” என எச்சரித்து பதில் அளித்தார்.