
காவிரிநீர் தமிழகத்துக்கு கிடைக்காததற்கு, மத்திய அரசு காரணம் இல்லை என அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், நிர்மலா சீத்தாராமன் கூறியதாவது:-
தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு காரணம் இல்லை. காவிரி நீர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால், மத்திய அரசு அதில் தலையிட வில்லை. காவிரி மேலண்மை அமைக்க மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்காததற்கு மத்திய அரசு என்ன செய்ய முடியும். இதில், தமிழக அரசால் விரைந்து முடிவெடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால், புதிய நிறுவனங்கள் அதிகம் வரவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.