
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பின்னர், வெளியே வந்த தீபா, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் தன்னை குண்டர்கள் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார். மேலும், காலை முதல் தன்னை, தீபக் போன் செய்து அழைத்தார். இங்கு வந்தேன் என கூறினார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இணை கமிஷனர் சரவணன், தீபா மற்றும் மாதவனை சமாதானம் செய்து, அங்கிருந்து புறப்படும்படி கூறினார். அவருடன் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஒருவர் வெளியே வந்தார். அவரை பார்த்து ஆவேசம் அடைந்த தீபா, “இதோ இதோ இந்த ஆளுதான் எல்லோரையும் அடிச்சது...
இந்த ஆளுதான். என்னையும் ராஜாவையும் அடிச்சி வெளியே தள்ளுனான். அதே ஆளுதான்... பிரமோத் அவனை பிடிங்க பிரமோத்... என கூறினார். அதற்குள், அந்த ஆசாமி அங்கிருந்து மறைந்துவிட்டார்.