உழைச்சா தாங்க உழைப்போட அருமை தெரியும்.. இதென்ன ரிமோட் கன்ட்ரோலா அழுத்தி பண்ற வேலையா? மாஸ் காட்டிய எடப்பாடியார்

Published : Nov 27, 2020, 11:41 AM ISTUpdated : Nov 27, 2020, 11:48 AM IST
உழைச்சா தாங்க உழைப்போட அருமை தெரியும்.. இதென்ன ரிமோட் கன்ட்ரோலா அழுத்தி பண்ற வேலையா? மாஸ் காட்டிய எடப்பாடியார்

சுருக்கம்

மின்சார விநியோகத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நின்று நிதானமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான பதிலை அளித்துள்ளார்.

மின்சார விநியோகத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி நின்று நிதானமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான பதிலை அளித்துள்ளார்.

வட மாவட்டங்களில் நிவர் புயர் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, கடலூர் பல்வேறு இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கியதாலும், மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், புயல் சேதாரங்கள் குறித்து கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மின்சார விநியோகத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் தான் ஆகும் எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்கினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கொஞ்சம் நேரம் கொடுங்கள். இதென்ன ரிமோட் கன்ட்ரோல்ல பண்ற வேலையா? பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்குறதுக்கு. ஒரு மின்சார கம்பத்த எடுத்து நட்டு பாருங்க எவ்ளோ நேரம் ஆகும் என்று தெரியும். உழைத்தால் தான் உழைப்போட அருமை தெரியும். 

ஒரு மின்கம்பத்தை எடுத்து அதுல வயர் மாட்டி வைத்தும் எல்லாம் சரி ஆகிவிடாது, நிறைய மரங்கள் இருக்கும், மரத்தின் மேலே கிளைகள் விழுவதால் எர்த் அடிக்கும். இதெல்லாம் பார்த்து தான் வேலை செய்ய முடியும். தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அரசுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டு செய்யுங்க, மின்சாரம் மிக ஆபத்தானது. ஒவ்வொருவரின் உயிர் ரொம்ப முக்கியம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!