24 ஏக்கர் நிலத்தை பறித்த திமுக பிரமுகர்... உரிமையாளரை ஓட ஓட விரட்டி...

Published : Nov 27, 2020, 10:42 AM IST
24 ஏக்கர் நிலத்தை பறித்த திமுக பிரமுகர்...  உரிமையாளரை ஓட ஓட விரட்டி...

சுருக்கம்

கோவையில் தன் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்த நபரை திமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தன் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்த நபரை திமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த மீன்கடை சிவா ஆக்கிரமிப்பு செய்து கொண்டார். இதனையடுத்து அந்த அந்த இடத்துக்கு சொந்தக்காரரான மாசானமுத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் புகார் அளித்துள்ளார்.

இதனை அறிந்த மீன் கடை சிவா மற்றும் அவருடைய அடியாட்கள், மாசானமுத்துவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், உயிருக்கு பயந்து ஊரை விட்டுச் சென்ற மாசானமுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் கோவை திரும்பியுள்ளார். இந்நிலையில் மாசானமுத்துவை மீன் கடை சிவா மற்றும் அவரது அடியாட்கள் ஓட ஓட தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மாசானமுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் புகார் மனு அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!