என்னுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் கொடுக்க வேண்டும்... அமைச்சர் அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jul 19, 2021, 10:38 AM IST
Highlights

ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஒரு தடுப்பூசிக்கு 250 ரூபாயும், இனிமேல் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பவர்கள் ரூ.500 யை நன்கொடையாக பி.எம் கேர்ஸ் நிதிக்கு வழங்க வேண்டும் 

மத்திய பிரதேச மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரான உஷா தாகூர் தன்னுடன் செல்ஃபி எடுக்க வேண்டுமானால்  ரூ .100 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

பாஜக அமைச்சரான அவர், ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஒரு தடுப்பூசிக்கு 250 ரூபாயும், இனிமேல் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பவர்கள் ரூ.500 யை நன்கொடையாக பி.எம் கேர்ஸ் நிதிக்கு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில்  தன்னுடன் செல்ஃபி எடுக்க ரூ .100 வசூலிக்கத் தொடங்கப்போவதாக கூறியுள்ளார். இந்தப்பணத்தை கட்சி பணிகளுக்காக வழங்கப்போதவதாகவும் தெரிவித்துள்ளார். 

“செல்ஃபி எடுப்பதற்கு நிறைய நேரம் ஆகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில நேரங்களில், இதன் காரணமாக பல மணி நேரம் வீணாகிறது.  எனவே ஒரு செல்ஃபிக்கு கட்டணம் வசூலிக்கும் இந்த யோசனையை எடுத்துள்ளேன் அவர் அவர் கூறியுள்ளார். கண்ட்வா மாவட்டத்திற்கு சென்ற அவர், ’’கட்சியினர் தன்னையோ,  ​​தலைவர்களையோ சந்திக்கும் போது ஒரு புத்தகத்துடன் வரவேண்டும். நீங்கள் ஒரு புத்தகத்தை வழங்க விரும்பினால், யாராவது அதைப் படித்து அதிலிருந்து கற்றுக்கொள்வார்கள். எனவே நீங்கள் அனைவரும் பூச்செண்டுக்கு பதிலாக ஒரு புத்தகத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ”என கேட்டுக் கொண்டுள்ளார். 

உஷா தாகூரின், அறிக்கைகள் மற்றும் பேச்சு பெரும்பாலும் சர்ச்சையைத் தூண்டும் விதத்தில் இருக்கும். சமீபத்தில், பொதுவெளியில் அவர் முகக்கவசம் அணியவில்லை என்கிற சர்ச்சை எழுந்தது. அதற்கு அவர், ‘’நான் தினமும் பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் செய்வதால் எனக்கு முகக்கவசம் தேவையில்லை’’என பதிலளித்தார். 

click me!