கொரோனா 3-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமாம்.. உஷாரா இருங்க.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்.!

By vinoth kumarFirst Published Jul 19, 2021, 10:01 AM IST
Highlights

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 3ம் அலைக்கு பொதுமக்கள் வழிவகுக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கைகளை கழுவுவது ஆகியவற்றை  பின்பற்ற வேண்டும். 

கொரோனாவின் 3-வது அலை வந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் 12வது அரிமா சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழக முழுவதும் மாவட்டம் வாரியாக கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 3ம் அலைக்கு பொதுமக்கள் வழிவகுக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கைகளை கழுவுவது ஆகியவற்றை  பின்பற்ற வேண்டும். அதேபோல் தேவையில்லாமல் பொது இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவருடனான சந்திப்பில் முதலமைச்சர் மேகதாது விவகாரம் குறித்து பேச உள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

click me!