2 முறை ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது! அதிக நாள் வாழமாட்டேன்! கண் கலங்கிய முதல்வர்!

By thenmozhi gFirst Published Oct 28, 2018, 1:25 PM IST
Highlights

நான் நீண்ட நாட்கள் உயிரோடு வாழ மாட்டேன் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீண்டும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் நீண்ட நாட்கள் உயிரோடு வாழ மாட்டேன் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீண்டும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சியின் அமோக ஆதரவுடன் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமி, பொதுக் கூட்டங்களில் பேசும்போது அடிக்கடி கண்ணீர் விட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் இதய நோயால் அவதிப்பட்டு வரும் அவர், நான் எத்தனை நாட்களுக்கு உயிரோடு இருப்பேன் என்று தெரியாது என்று தற்போது கூறியிருப்பது, அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டியா மாவட்டம் மலவள்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கடவுளின் கருணையாலும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவால்தான், தாம் இன்னும் முதலமைச்சராக பதவி வகித்து வருவதாக உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். மேலும் எனது தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறும் சக்தி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு உள்ளது என்றும், அக்டோபர் 24ஆம் தேதி எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் அது ஏன் என்று கூறமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

அதேநேரத்தில், நான் மக்களுக்கு துரோகம் செய்து விட்டால், நான் உயிரோடு இருந்தாலும் இறந்ததாக நான் கருதப்படும். நான் பணம் சம்பாதிப்பதற்காக முதலமைச்சராக வரவில்லை என்றும், பணத்தின் தேவையும் எனக்கில்லை என்று குமாரசாமி உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். மக்கள் தான் என சொத்து. மக்களின் அன்பு மற்றும் பாசம் கிடைத்தால் போதும் என்று நினைப்பவன் நான். இதை தேர்தல் பொதுக்கூட்டங்களில் பலமுறை கூறி இருக்கிறேன் என்றும் குமாரசாமி பேசினார்.

இஸ்ரேலுக்கு கடந்த ஆண்டு நான் சென்றிருந்தபோதே இறந்திருப்பேன். ஆனால் மருத்துவ சிகிச்சையால் உயிர் பெற்றேன். ஆனாலும், இனி நான் எத்தனை நாட்களுக்கு உயிரோடு இருப்பேன் என்று எனக்கே தெரியாது. நான் உயிரோடு இருப்பதே மக்களுக்கு சேவை செய்யத்தான் என்றும் கூறியுள்ள குமாரசாமி, எனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவை செய்ய விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்து பணம் சம்பாதிப்பதற்காக, அவசர கதியில் அரசை நடத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் நினைத்துப் பார்க்கையில் எனது சேவைகள் அமையும் என்றும் முதலமைச்சர் குமாரசாமி கூறினார்.
 

click me!