தினமும் மாட்டு சிறுநீரை குடிப்பதால் எனக்கு கொரோனா இல்லை... பாஜக எம்.பி., சர்ச்சை பேச்சு..!

Published : May 17, 2021, 04:55 PM IST
தினமும் மாட்டு சிறுநீரை குடிப்பதால் எனக்கு கொரோனா இல்லை... பாஜக எம்.பி., சர்ச்சை பேச்சு..!

சுருக்கம்

நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை என பாஜக எம்.பி. பிரக்யா சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை என பாஜக எம்.பி. பிரக்யா சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

போபாலில் நிகழ்ச்சி ஒன்றில்பங்கேற்று பேசிய அவர், “நானும் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும். அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும்” என்றார்.  இந்தப்பேச்சு அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

முன்னதாக பசு சிறுநீர் மற்றும் சானத்தால் கொரோனா ஒழியும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லையென ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறியிருந்தார். 

PREV
click me!

Recommended Stories

நேரு குடும்பத்தில் டும் டும் டும்.. காதலியை கரம் பிடிக்கும் பிரியங்கா காந்தி மகன்.. யார் இந்த அவிவா பெய்க்?
இபிஎஸ் பேசும்போது அதிர்ச்சி.. பக்கத்தில் மயங்கி சரிந்த மா.செயலாளர்.. பதறிய தொண்டர்கள்.. என்ன நடந்தது?