ராஜராஜ சோழன் பற்றி நானாக பேசவில்லை... இயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கு ரத்து..!

By Thiraviaraj RMFirst Published Nov 12, 2021, 5:12 PM IST
Highlights

வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும், தனது கருத்து எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் இல்லை.

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலப்புலிகள் அமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில்,  மாமன்னர் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் ஜாதி ஒடுக்குமுறை அதிகளவில் இருந்ததாகவும், அவரது ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.  மாமன்னர் ராஜராஜசோழன் ஆட்சியில் தான் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் இந்த கருத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் இணையவாசிகள் வரை விமர்சித்தனர். 

இயக்குநர் ரஞ்சித் மீதான அவதூறு வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவுதொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். மாறுபட்ட விமர்சனங்களும் வரத்தொடங்கின.

தொடர்ந்து,  இயக்குனர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்நிலைய காவல் ஆய்வாளர் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில், தனது மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யகோரி, இயக்குனர் பா.ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும், தனது கருத்து எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் இல்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், ராஜராஜசோழன் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

தாமாக எந்த கருத்தையும் கூறவில்லை என்றும், வரலாற்று புத்தகங்களில் இருந்த தகவல்களையே குறிப்பிட்டதாகவும் பா.ரஞ்சித் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

click me!