தமிழக அரசியலில் பெரிய சவாலாக விளங்கி வரும் டிடிவி தினகரன் மற்றும் அவர்களது ஆதரவு எம்எல்ஏக்கள் குறித்து தற்போது தமிழக பொருப்பாளுநர் வித்யா சாகர் ராவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதாவது தினகரன் ஆதரவு 19 எம் எல் ஏக்களும் அதிமுகவிலேயே நீடிப்பதால் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கருத முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்மேலும் ஒரே கட்சி இரு குழுக்களாக பிரிந்து செயல்படுவதால் சட்டப்படி தலையிட முடியாது என ஆளுநர் தெரிவித்ததாக, அவரை நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்த விசி கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்19 பேரும் அதிமுக விலிருந்து விலகினால் மட்டுமே எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாக கருத முடியும் எனவும் கூறியதாக தெரிவித்துள்ளார் திருமாவளவன் மேலும் தற்போது உள்ள சூழலில் ஆட்சியை கலைப்பதை மத்தியில் ஆளும் பாஜக விரும்பவில்லை என்பதற்காகத்தான் , இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்ராஜ் பவனில் ஆளுனரை சந்தித்த திருமாவளவன் உள்ளிட்ட மற்ற தலைவர்களிடம் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்