பிஜேபிக்கு என் வாயால் ஓட்டு கேட்க என்னால் முடியாது... அதற்கு நான் தூக்குப்போட்டு செத்திடலாம்..! கருணாஸ் கதறல்!

Published : Oct 17, 2020, 01:06 PM IST
பிஜேபிக்கு என் வாயால் ஓட்டு கேட்க என்னால் முடியாது... அதற்கு நான் தூக்குப்போட்டு செத்திடலாம்..! கருணாஸ் கதறல்!

சுருக்கம்

தற்போது பாஜக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். பாஜக கூட்டணியை அதிமுகவில் உள்ளவர்களே விரும்பவில்லை.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடணை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

கருணாஸ் பாஜகவில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. ’’முக்குலத்தோர் புலிப்படையை களைத்து விட்டு பா.ஜ.க வில் இணைய போகிறோம் என்கிற தகவல் தவறானது. நாங்கள் தனித்தே செயல்படுவோம். சசிகலாவிற்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு. அவருக்கு உறுதுணையாக இருப்போம். அடிமட்ட தொண்டராக இருந்து உயர்ந்த தற்போதைய முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள். தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம். 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் உள்ள அதிமுக மீது மக்களுக்கு வெறுப்போ, மனக்கசப்போ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.

தற்போது பாஜக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். பாஜக கூட்டணியை அதிமுகவில் உள்ளவர்களே விரும்பவில்லை. பிஜேபிக்கு என் வாயால் ஓட்டு கேட்க என்னால் முடியாது..! அதற்கு நான் தூக்குப்போட்டு செத்திடலாம்’’என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி