அம்மா சொன்னதை காப்பாற்ற நான் உங்களைத் தேடி வந்தேன்... எடப்பாடியை ஓவர் டேக் செய்யும் சசிகலா..!

Published : Nov 22, 2021, 05:13 PM IST
அம்மா சொன்னதை காப்பாற்ற நான் உங்களைத் தேடி வந்தேன்... எடப்பாடியை ஓவர் டேக் செய்யும் சசிகலா..!

சுருக்கம்

என்னுடைய வீட்டை சுற்றியும் தண்ணீர் வெள்ளத்தில்தான் நீந்தி வந்திருக்கிறேன்.

உங்களையெல்லாம் நேராக பார்த்து அம்மா சொன்னதை காப்பாற்ற நான் என்னால் முடிந்த உதவியை செய்யவே உங்களை தேடி வந்துள்ளேன்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சசிகலா சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த சென்னை மாநகரம் எத்தகைய கஷ்டத்தில் இருக்கிறது என்பதை நன்கு அறிந்துள்ளேன். என்னுடைய வீட்டை சுற்றியும் தண்ணீர் வெள்ளத்தில்தான் நீந்தி வந்திருக்கிறேன். சென்னை மாநகரம் வெள்ளம் சூழ்ந்து எத்தகைய கஷ்டத்தில் உள்ளதை நன்கு அறிந்துள்ளேன்.எனது இல்லத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. என்னால் முடிந்த உதவியை செய்யவே உங்களை தேடி வந்துள்ளேன்’’ என அவர் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த இரு வாரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று பூந்தமல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் சசிகலா ஆய்வு செய்தார்.

குடிசை வீடுகளுக்குள் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்த சசிகலா அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல், ஒரு வீட்டில் சாதம் வெந்துள்ளதா என்பதையும் அவர் சரி பார்த்தார். இதேபோல், விபத்தில் காயமடைந்த நரசிம்மன் என்பவர் வீட்டுக்கு சென்ற சசிகலா அவரை நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை சசிகலா வழங்கினார். அப்போது பேசிய சசிகலா, தனது வீட்டையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் மக்களை பார்ப்பதற்காக நீந்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ‘ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் எந்த கஷ்டத்தில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன். ஜெயலலிதா சொன்னதை காப்பாற்ற என்னால் முயன்ற உதவிகளை செய்வேன்’ என்று சசிகலா குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S