உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது.. அனைவரது சேவைக்கு தலைவணங்குகிறேன்.. முதல்வர் நெகிழ்ச்சி பதிவு.!

By vinoth kumarFirst Published Nov 12, 2021, 8:26 AM IST
Highlights

தொடர் மழை - அளவுக்கு அதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர் துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், காவலர்கள், மின் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரது சேவையையும் போற்றுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில் நேற்று கரையைக் கடந்தது. இதனால் நேற்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் சென்னையின் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் என அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க;- Chennai Floods : திடீர் நெஞ்சுவலி.. 3 அடி வெள்ள நீரில் பெண்ணை பத்திரமாக மீட்ட 108 ஆம்புலன்ஸ்..!

மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட இளைஞரை தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்ற உதவிய பெண் காவல் ஆய்வாளர், கொட்டும் மழையிலும் மின் கம்பத்தில் ஏறி பணி செய்த மின் துறை பணியாளர்கள், வெள்ள பாதிப்புகளை அகற்ற முழுவீச்சில் செயல்பட்டு வரும் அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களின் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கப் பணியாற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- உயிர் போயிடக்கூடாது காப்பாத்துங்க.. தோளில் தூக்கிச் சென்று இளைஞரை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்..Viral Video

இது தொடர்பாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தொடர் மழை - அளவுக்கு அதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர் துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! மக்களைக் காப்போம்! உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

click me!