ஆளுநரை கையெடுத்து கும்பிடுறேன்.. கையெழுத்து போட்டு இளைஞர்களை காப்பாத்துங்க.. அன்புமணி ராமதாஸ்..!

By vinoth kumar  |  First Published Apr 4, 2023, 1:39 PM IST

காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. முதலமைச்சர் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநில அரசிடம் இது தொடர்பாக கேட்டால், எங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். மத்திய அரசுடன் மாநில அரசு கைகோர்த்து செயல்படுகிறது.


என்எல்சி நிர்வாகத்திற்காக வரிந்துகட்டிக்கொண்டு விவசாயிகளை மிரட்டி நிலத்தை ஏன் பறிக்கிறது என தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில்;- என்எல்சி 3வது சுரங்கம் சேத்தியாதோப்பு, புதிய வீராணம், பாளையங்கோட்டை, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 6 நிலக்கரி சுரங்கத்திற்கு நாங்கள் அனுமதி கொடுக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். விளைநிலங்களை அழித்து நிலக்கரி சுரங்கத்திற்கு கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

Tap to resize

Latest Videos

undefined

என்எல்சி நிர்வாகத்திற்காக வரிந்துகட்டிக்கொண்டு விவசாயிகளை மிரட்டி நிலத்தை ஏன் பறிக்கிறது தமிழ்நாடு அரசு என கேள்வி எழுப்பியுள்ளார். என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் மற்றும் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். 

காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. முதலமைச்சர் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநில அரசிடம் இது தொடர்பாக கேட்டால், எங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். மத்திய அரசுடன் மாநில அரசு கைகோர்த்து செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். 

தாய் மொழி படிக்காமல் பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இந்த பெருமை திராவிட கட்சிகளுக்குதான் சேரும். தமிழகத்தில் எங்கே தமிழ் எனும் நிலைதான் உள்ளது. நீட் தேர்வு 100% தேவையில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, 2 ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் செய்யவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து இடாதது ஏன் என தெரியவில்லை. ஆளுநரை கையெடுத்து கும்பிடுறேன். தடை சட்டத்துக்கு கையெழுத்து போடுங்க. தமிழ்நாட்டு இளைஞர்களை காப்பாத்துங்க என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

click me!