"ராமாயணம், பகவத் கீதையில் வரும் இந்துத்துவாவை நான் நம்புகிறேன்" அரவிந்த கெஜ்ரிவால் அதிரடி.

Published : Mar 29, 2022, 02:56 PM IST
"ராமாயணம், பகவத் கீதையில் வரும் இந்துத்துவாவை நான் நம்புகிறேன்" அரவிந்த கெஜ்ரிவால் அதிரடி.

சுருக்கம்

அதேபோல் ராமாயணம், மகாபாரதத்தில் வருகின்ற இந்துத்துவாவை தான் நம்புவதாக கூறிய அவர், கீதையில் ராமர் எதை குறிப்பிட்டாரோ அதுதான் இந்துத்துவம் என்றார்.

ராமாயணம்  பகவத் கீதையில் வரும் இந்துத்துவாவை தான் நம்புவதாகவும் ராமர் பகவத் கீதையில் என்ன சொன்னாரோ அதுதான் இந்துத்துவம் என்றும் குறிப்பிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ராமர் ஒருபோதும் நமக்குள் பகையை கற்பிக்கவில்லை என கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி துவங்கப்பட்டது முதல் அக்காட்சிக்கான ஆதரவு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் அக்காட்சியை இரண்டாவது முறையாக டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதலில் வட இந்தியாவில் அக்கட்சிக்கான ஆதரவாளர்கள் அதிகம் வருகின்றனர். குறிப்பாக நடந்த முடிந்த தேர்தலில் பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. இதனால் ஆம் ஆத்மி  தேசிய கட்சியாக உருவெடுக்கும் சூழல் பிரகாசமாக தெரிகிறது. அடுத்ததாக குஜராத்தை குறிவைத்து கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காய்களை நகர்த்தி வருகிறார். காங்கிரசை பின்னுக்கு தள்ளி பாஜகவுக்கு எதிரான சக்தியாக விரைவில் ஆம் ஆத்மி உருவாகும் என அரசியல் நோக்கர்கள் கணித்து வருகின்றனர்.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி கண்டதை அடுத்து ஆம் ஆத்மி தற்போது குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், பாரதி ஜனதா கட்சியின்  இந்துத்துவா கொள்கையை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது,  சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜக இந்துத்துவா கொள்கைகளால் வெற்றிபெற முடிந்ததற்கு அங்கு அந்த கொள்கைக்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததே காரணம் என கூறினார். 

அதேபோல் ராமாயணம், மகாபாரதத்தில் வருகின்ற இந்துத்துவாவை தான் நம்புவதாக கூறிய அவர், கீதையில் ராமர் எதை குறிப்பிட்டாரோ அதுதான் இந்துத்துவம் என்றார். ராமாயணத்தில் ராமர் என்ன சொன்னாரோ அதுதான் இந்துத்துவம் என்ற கெஜ்ரிவால்,  ராமர் ஒருபோதும் நமக்கு பகைமையை கற்பிக்கவில்லை என்றார். ஆனால் உத்தர பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  தலித்துகள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் இந்துத்துவா என்ற பெயரில் தாக்குதல் நடத்துகிறது என்றார். 

குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது உண்மைதான் ஆனால் அது பிரதமர் மோடியை குறிவைத்து அல்ல அவர் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரதமர் என்றார். பஞ்சாப் மாநில வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி குஜராத் சட்டசபை தேர்தலை குறி வைக்க உள்ள நிலையில் அவர் இவ்வாறு பாஜகவையும், இந்துத்துவத்தையும் விமர்சித்துள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!