தொடர்ந்து என் மீதும், பாரதப் பிரதமர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள், ஆர்எஸ் பாரதிக்கு அறிவு உள்ளதா? 610 கோடிக்கு நான் worth இல்லை, என்னிடம் ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது. தொட்டம்பட்டியில் இருந்து வந்துள்ள என் மீது கை வைத்து பார்க்கட்டும். பிஜிஆர் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நஷ்டத்தில் இயங்கும் என தெரிந்தும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
தன் 100 கோடி ரூபாய்க்கு worth இல்லை என்றும், தனக்கு ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திமுக அண்ணாமலைக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுத்துள்ள நிலையில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுக்கும் அதிமுகவுக்குமான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதேபோல முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து பேசிய அவர் தமிழக மக்களின் நிதியைப் பெருக்க முதலமைச்சர் துபாய்க்கு செல்லவில்லை தனது குடும்பத்தை பெருக்க, குடும்ப நிதியை பெருக்க சென்றுருக்கிறார் என்றும், திமுகவினர் ஊழல் செய்த பணத்தை துபாயில் முதலீடு செய்யவே பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்அவர் குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்து அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் இல்லையென்றால் மானநஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும் என திமுக சார்பில் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது இதேபோல துபாய் பயணத்தை விமர்சித்தார் சேலம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:- நக்கீரன் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட உள்ளதாக கழுகார் பகுதியில் வந்துள்ளது.
தனி விமானத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உதவியாளர்கள் வின்சென்ட், விஜய் மற்றும் குடும்ப ஆடிட்டர்கள் துபாய் சென்றுள்ளனர். தொடர்ச்சியாக முதல்வரின் குடும்பத்தினர் ஏன் துபாய் சென்று வருகின்றனர். துபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் நிதியை அல்லது கோபுரத்திற்கு போகும் நிதியா என கேள்வி எழுப்பினேன். நான் பேசிய அனைத்து விஷயங்களை ஆதாரப்பூர்வமாக சந்தித்து இருக்கிறேன். நான் அதிமுக உறுப்பினர்கள் தூண்டுகோலால் பேசுவது போன்ற அவதூறு பரப்புகிறார்கள். நான் அடுத்த 6 மணிநேரம் பாஜக அலுவலகத்தில் தான் இருப்பேன் முடிந்தால், திராணி இருந்தால் என்னை கைது செய்து கொள்ளுங்கள். நீங்கள் இன்று என்னை கைது செய்யவில்லை என்றால் மக்களிடம் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள்.
தொடர்ந்து என் மீதும், பாரதப் பிரதமர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள், ஆர்எஸ் பாரதிக்கு அறிவு உள்ளதா? 610 கோடிக்கு நான் worth இல்லை, என்னிடம் ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது. தொட்டம்பட்டியில் இருந்து வந்துள்ள என் மீது கை வைத்து பார்க்கட்டும். பிஜிஆர் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நஷ்டத்தில் இயங்கும் என தெரிந்தும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது யார் சிபாரிசு? தனி விமானத்தில் குடும்பத்துடன் ஆடிட்டர்கள் சென்றது ஏன்? உங்கள் மடியில் கனம் இருக்கிறது அதை மறைக்க என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள். விமான செலவுக்கு கட்சி பணம் கட்டும் என சொல்வது சட்டபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்ட பிறகு தான் கட்சி கட்டும் என்று சொல்கிறார்கள்.
முதல்வர் குடும்பத்தை அழைத்து செல்லட்டும் அதற்கு உரிமை உள்ளது. ஆனால் யார் அவரை வரவேற்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மால் கட்டிக்கொடுக்கும் முதல்வராக முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வராக உள்ளார். மாநில வளர்ச்சிக்கு மால் முக்கியமா தொழிற்சாலைகள் முக்கியமா? CM ஆவதற்கு எனக்கு விருப்பமில்லை, முதல்வர் ஆவதற்கு நான் வரவில்லை, முதல்வர்களை உருவாக்க வந்துள்ளேன். பேசவே எனக்கு தகுதி இல்லை என்று சொல்கிறார்கள் நான் நன்கு படித்து இருக்கிறேன், ஐபிஎஸ் பாஸ் செய்திருக்கிறேன். அதை மீறி என்ன தகுதி எனக்கு வேண்டும். கோபாலபுரம் இல்லத்தில் நான் பிறந்து இருக்க வேண்டுமா? என அண்ணாமலை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.