அதிமுக - திமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: ராமதாஸ்

First Published Nov 19, 2017, 3:57 PM IST
Highlights
I apologize to the people for the coalition


கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாகவும், அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றும் ராமதாஸ் கூறியிருந்ததற்கு மீன் வளத்துறை அமைச்சர், ஜெயலலிதாவை குறை சொல்வதற்கு ராமதாசுக்கு எள்ளளவும் தகுதி இல்லை என்று கூறியுள்ளார். பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது ஜெயலலிதாவால்தான் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாகவும், அவற்றுக்கு மாற்றாக பாமக தலைமையில் கட்சிகள் இணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதில் பாஜகவுக்கு அழைப்பில்லை என்று கூறிய அவர், விடுதலை சிறுத்தைகள் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்துவிட்டு சென்றார். 

தமிழக அரசின் கோடிக்கணக்கான ரூபாய் கடன் மற்றும் அதற்கான வட்டி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி முடங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார் பாமக தலைமையில் ஆட்சி அமைந்தால் அன்புமணியால் தமிழக அரசின் கடனை அடைத்துவிட முடியுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், செய்தியாளர் தனியாக வருமாறும் அது குறித்து ஒரு மணி நேரம் பேசத் தயாராக இருப்பதாகவும் ராமதாஸ் கூறினார். 

தொடர்ந்து 50 ஆண்டுகளாக தொடர்ந்து மாறி மாறி ஆட்சியில் இருந்து வரக்கூடிய அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

click me!