காங்கிரஸ் ஆட்சியைப்போல மோடி அரசும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும்... ப.சிதம்பரம் எச்சரிக்கை

First Published Nov 19, 2017, 3:55 PM IST
Highlights
Modi Government Likely To Get Corruption Tag As UPA II Chidambaram


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது போல், பிரதமர் மோடி தலைமையிலான அரசும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எச்சரிக்கை செய்துள்ளார். 

மும்பையில் நடந்துவரும் டாடா இலக்கிய விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது- 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் மக்களிடத்தில் சேர்த்து வைத்து இருந்த மரியாதையா, 2வது முறையாக ஆட்சியில் இருந்த போது, பல ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவற்றை இழந்தது.

ஒரு சிலரின் செயலால் பரவலாக உருவாகும் ெவறுப்புணர்வு,  2019ம் ஆண்டு  பா.ஜனதா அரசு தனது ஆட்சியை நிறைவு செய்யும்போது, ஏற்படும். ஆனால், அப்படி ஏதும் நிகழக்கூடாது என விரும்புகிறேன். 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது, சிலரின் செயலால் மக்கள் மத்தியில் பரவாலாக வெறுப்புணர்வு கட்சியின் மீதும், அரசின் மீதும் ஏற்பட்டது. 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் எந்த அரசின் மீதும் இதுபோன்ற ஒரு சிலரின் செயலால் ஏற்படும் வெறுப்புணர்வு உருவாகலாம். அது போன்று மக்கள் மத்தியில் ஏற்படும் வெறுப்புணர்வு பா.ஜனதா அரசு மீது ஏற்படக்கூடாது என விரும்புகிறேன், ஆனால், அது நடக்கும். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2-வது கட்ட ஆட்சியில் சிலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்கள், சிலர் தண்டிக்கவும்பட்டார்கள். சிலர் குற்றவாளி என்பதை ஏற்றுக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.

ஒவ்வொருவரும் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை குற்றவாளி என ஊகித்துக்கொள்கிறார்கள். இது என்னைப் பொருத்தவரை தவறு. இது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்துவிடும். மிகப்பெரிய ஊழலுக்கு முக்கிய காரணமாக இருப்பது, தேர்தலுக்கு நிதி அளிக்க வேண்டும் என்பதற்கான பேராசைதான். 

ஒரு அரசியல் கட்சி அல்லது அரசியல்வாதி, தேர்தலின்போது நிதி அளிப்பது அவசியம். அதுதான் உங்களை ஊழல் செய்ய தூண்டும். தேர்தலுக்கு நிதி அளிக்கும் மாற்றுவழிகளை கண்டுபிடிக்காவிட்டால், உங்களால் ஊழலின் அளவை குறைக்க முடியாது. 

 ரூபாய் நோட்டு தடையின் மூலம் ஊழலையும், கள்ள நோட்டுகளையும் கட்டுப்படுத்த முடியாது. ரூபாய் நோட்டு தடை தோல்வி அடைந்த விஷயம். 

ரூபாய் நோட்டு தடை எங்கு தோல்வி அடைந்துள்ளது என்பதை அறிய விரும்பினால், கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டாலோ, ஊழலை தடுக்க முடியாவிட்டாலோ, அடுத்த 20 நாட்களுக்கு குஜராத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பாருங்கள். என்ன விதமான பணம் அங்கு செலவு செய்யப்படுகிறது என்பது தெரியும். 

மோடி அரசு ரூபாய் நோட்டு தடையின் மூலம் மொத்தம் ரூ.41 கோடி கருப்புபணம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடையின் மூலம் தீவிரவாத செயல்களுக்கு நிதி செல்வது தடுக்கப்பட்டுள்ளதாக அ ரசு தெரிவிக்கிறது. நவம்பர் 10ந்தேதிக்கு பின், ஏராளாமாந தீவிரவாத தாக்குதல்கள், ஊடுறுவல்கள் நடந்துள்ளன, மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்,வீரர்கள் வீரமரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மிகப்பெரியது. இவ்வாறு அவர் பேசினார். 

click me!