"பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்".. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட ஆ.ராசா.

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2022, 10:57 AM IST
Highlights

அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு  ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. என் வாழ்வில் நான் மாறியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான்.

பெரியாரின் சிந்தனைகள் என்னுள் வந்த பின்பு ஊரில் இருந்த பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனைவெடி வைத்து அதை தகர்த்தவன் தானென திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார். பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம்தொட்டு, மழை வெள்ளம் பாதிப்புவரை அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சிகளான அதிமுக-பாஜக பிரச்சாரத்தின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலுக்கான மாநில வரி குறைக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழக அரசும் அந்த வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்து திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில்  அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில்  அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.

இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையைப் பின்பற்றிய ஆனைமுத்து படத்திறப்பு விழாவில் இந்து மதத்தை தான் ஏன் எதிர்க்கிறேன் என்றும், காவி எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கி பேசியுள்ளார். மேலும் கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும் என்று பேசியுள்ளார். தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-  சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், 96 வயது வரை வாழ்ந்து, 75 ஆண்டுகாலம் பெரியார் குறித்து மட்டுமே பேசி மறைந்த ஆனைமுத்து படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடியது, டெல்லிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசுவார். ஒரு தத்துவத்தை கூறி அந்த தத்துவம் நிறைவேறுவதை தன் கண்ணால் பார்த்த ஒரே தலைவர் பெரியார் அந்த பெரியாரே பேரறிஞர் என ஆனைமுத்துவை கூறினார். அதை விட அவருக்கு நாம் என்ன பெருமையை செய்ய முடியும். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் நானும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிரு ந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி... காலையில் எழுந்ததும் இந்த விதிகளை வச்சுக்கோ,  இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன். 

அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு  ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. என் வாழ்வில் நான் மாற்றியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். தொடர்ந்து பேசிய அவர் நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது. ஏன் என்றால் இந்து அமைப்பு சட்டத்தில் யார் கிறிஸ்துவர்கள், யார் இஸ்லாமியன், யார் யூதன் இல்லையோ மற்ற அனைவரும் இந்து என்றுதான் சட்டம் உள்ளது. எனவே நானே நினைத்தாலும் வெளியேற முடியவில்லை அப்படி வெளியேறினால் அந்த நாள் வந்தால் அதுதான் ஆனைமுத்துவிற்கு மரியாதை செய்யும் நாளாக இருக்கும் என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்.
 
 

click me!