மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு சிறிது காலம் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், அதிமுகவில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டது.
நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நேரம் வரும்போது நிரூபிப்பேன் என்று மைசூரை சேர்ந்த பெண் பிரேமா கூறியுள்ளது அதிமுகவில் புதிய சலசலப்பை கிளப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு சிறிது காலம் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், அதிமுகவில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டது. அதே தருணத்தில், ஜெயலலிதாவின் மகள் மற்றும் மகன் என்று பலரும் பேட்டிகள் அளிக்கத் தொடங்கினர். சில தரப்பினர் ஜெயலலிதாவிற்கு உண்மையில் எந்த வாரிசும் இல்லை என்றும் கூறினர். அவரது மரணத்தில் தான் மர்மம் என்றால் அவரது சொந்த வாழ்க்கை பற்றியும் பல்வேறு மர்மங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.
undefined
இதையும் படிங்க;- அதிமுக அரசு சொன்னதால் தான் சிசிடிவியை அகற்றினோம்.. உச்சநீதிமன்றத்தில் ஒரேபோடு போட்ட அப்பல்லோ.!
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பெண் ஒருவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- நான் மைசூரில் இருந்தேன். சென்னை பல்லாவரத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். வரக்கூடாது என்றே இருந்தேன். அம்மாவின் நினைவு அதிகமாகவே இருந்தது. அதனால், அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன். தீபாவளி அன்று அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். கால தாமதமாகிவிட்டதால் காவல்துறை அனுமதிக்கவில்லை. மறுநாள் அனுமதி கிடைத்ததால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன்.
இதையும் படிங்க;- அம்மா இருந்திருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா? குண்டு கல்யாணத்துக்கு உதவ தொண்டர்களை அழைக்கும் பூங்குன்றன்.!
என்னை வளர்த்த பெற்றோர் உயிரிழந்துவிட்டனர். என்னை பேபி என்று செல்லமாக ஜெயலலிதா அழைப்பார். ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்பதை நேரம் வரும்போது ஆதாரத்துடன் நிரூபிப்பேன். என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது. ஆயிரம் பேர் அம்மா, அம்மா என்று வரலாம். நான் என்னை பெற்ற தாயை தேடி வந்துள்ளேன். எனக்கு அம்மாவிற்கு பிறகு இப்போது சின்னம்மா சசிகலா மட்டும்தான் உள்ளார். இனிமேல்தான் நான் அவர்களை பார்த்து பேச உள்ளேன். அரசியலை பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது என்றார்.
இதையும் படிங்க;- சொன்னதுமே செவிசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த நொடியே முதல்வருக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்.!
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பின்வாசல் வழியாக சென்று அவரை சந்தித்தேன். ஜெயலலிதாவின் உதவியாளர் முத்துசாமி என்பவர் என்னை அழைத்தார். அப்போது ஜெயலலிதா எனக்கு முத்தம் கொடுத்தார். போயஸ் கார்டன் இல்லத்திலும் அம்மா ஜெயலலிதாவை ஒருமுறை சந்தித்துள்ளேன் என்று பிரேமா கூறியுள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.