நானே முதல்வர் வேட்பாளர்.. 60 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டும் கிருஷ்ணசாமி..

By Ezhilarasan BabuFirst Published Mar 15, 2021, 1:47 PM IST
Highlights

வரும் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் அவர், மீண்டும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கியுள்ளார். விரைவில் அடுத்தடுத்த தொகுதி பட்டியலை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், வரும்  சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், அதற்கான 60 தொகுதிகளுக்கானமுதற்கட்ட வேட்பாளர்  பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டு அதிரடி கிளப்பியுள்ளார். 

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி,  தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது அக்கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் தென்மாவட்டத்தில் தேவேந்திர குல மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில், அண்மையில் எஸ்சி பட்டியலில் உள்ள எழுதி சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்கள் நீக்கப்படவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த புதிய தமிழகம் கட்சியில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. 

வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை வெளியிடாமல் மவுனம் காத்து வந்த டாக்டர் கிருஷ்ணசாமி,  இன்று திடீரென சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என காத்திருந்தோம்,  ஆனால் அதிமுக தங்களை அழைக்கவில்லை, அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் எனக் கூறினார். அத்துடன் 60 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார். அனைவரும் மார்ச் 18ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும், தனது கட்சியின் முதல்வர் வேட்பாளர் தான்தான் எனவும் அவர் அறிவித்தார். இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு கிருஷ்ணசாமி  வென்றார்.  பிறகு கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் போட்டிட்டு வென்றார். 

வரும் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் அவர், மீண்டும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கியுள்ளார். விரைவில் அடுத்தடுத்த தொகுதி பட்டியலை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு செய்திருப்பது தேவேந்திரகுல சமுதாயத்தினர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் தங்களை முழுமையாக பட்டியலில் இருந்து விடுவிக்க வில்லையே என கூறி கிருஷ்ணசாமி கூட்டணியில் இருந்து ஒதுங்கியுள்ளார். எப்படியும் தென்மாவட்டத்தில் தேவேந்திரகுல  வேளாளர் சமூகத்தின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில், அதிமுக-பாஜக கூட்டணி அவர்களுக்கு சலுகையை அறிவித்த நிலையிலும், கிருஷ்ண சாமி கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பதுடன், அவர் தனித்து போட்டி என அறிவித்து, அதற்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது அதிமுக-பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!