பெண்களை மதிக்கமாட்டிங்கிறாங்க…மறுபடியும் போவேன்: சபரிமலையில் பதற்றத்தை ஏற்படுத்தும் திருப்தி தேசாய் ....

Published : Nov 17, 2019, 09:10 AM IST
பெண்களை மதிக்கமாட்டிங்கிறாங்க…மறுபடியும் போவேன்: சபரிமலையில் பதற்றத்தை ஏற்படுத்தும் திருப்தி தேசாய் ....

சுருக்கம்

பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்காமல் தடுக்கிறார்கள். கேரள அரசு பெண்களை மதிக்கவில்லை. 20ம் தேதிக்கு மேல் நான் சபரிமலைக்கு செல்வேன் என்று பெண்உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் கொந்தளித்துள்ளார் .

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 63 சீராய்வு மனுக்கள் மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைத்தார்கள். 

தீர்ப்புக்குப்பின் பேட்டி அளித்த மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், " சபரிமலை ஐயப்பன் கோயில் பெண் ஆர்வலர்கள் விளம்பரம் தேடும் அல்ல, போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்லஅவர்களுக்கு ஒருபோதும் அரசு ஆதரவு அளிக்காது. பாதுகாப்பும் வழங்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமாட்டோம் என்று கேரள அரசு கூறியது குறித்து பெண்கள்நல ஆர்வலர் திருப்தி தேசாய் அளித்த பேட்டியில் " 
சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 

ஆதலால், போலீஸ் பாதுகாப்பின்றி பெண்கள் சபரிமலை செல்ல வேண்டும். அவ்வாறு சென்ற பெண்களையும் தடுக்கிறார்கள். பெண்களுக்கு எதிராக கேரள அரசு செயல்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்


நவம்பர் 20-ம் தேதிக்குப்பின் சபரிமலை கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். ஒருவேளை கேரள அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டாலும்கூட நான் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்குச் செல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!