எனக்கு காங். சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் விருப்பமில்லை... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி!!

By Narendran S  |  First Published Mar 10, 2023, 10:33 PM IST

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: உதகையில் ஆளுநர் ரவிக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

Latest Videos

இதனைத்தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் சட்டமன்ற உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கொறடா விஜயதரணிக்கு தனியாக ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து அதற்கான வருத்தத்தையும் தெரிவித்து, அடுத்தமுறை மீண்டும் பதவியேற்கும் சந்தர்ப்பம் வந்தால் அவரை தனியாக சென்று கூப்பிடுவேன்.

இதையும் படிங்க: NLCக்கு எதிராக நாளை முழு அடைப்பு; பேருந்துகள் பணிமனைக்கு திரும்புவதால் மக்கள் அவதி

சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்கனவே செல்வப்பெருந்தகை இருக்கின்றார். வயதில் சிறியவராக இருந்தாலும் அவரை பொருத்தவரை மதச்சார்பற்ற முறையில் ஜாதி பாதகங்களை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு இளைஞர். அவரது செயல்பாடுகள் கடந்த 20 மாதங்களாக நல்லபடியாக இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் அவரே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றேன். எனக்கு சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

click me!