ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: உதகையில் ஆளுநர் ரவிக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published : Mar 10, 2023, 07:52 PM IST
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: உதகையில் ஆளுநர் ரவிக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

சுருக்கம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உதகையில் சிபிஐ, சிபிஎம். உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலரும் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தமிழ்நாடு அரசு மக்களின் நலனை கருதி சட்டமன்றத்தில் மு.க ஸ்டாலின் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்தத் தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி மூன்று நாட்களுக்கு முன்பு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனால் ஆளுநர் ரவிக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், உதகையில் தங்கியுள்ள ஆளுநர் ரவியை கண்டித்தும், உடனடியாக வெளியேற வலியுறுத்தியும் உதகை ஆளுநர் மாளிகை முன்பு உள்ள அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

திண்டுக்கல்லில் கள்ளக்காதல் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல்; 15 பேர் காயம்

இதனால் அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காலை 8.30  மணிக்கு கேரள மாநிலம் வைத்தேரிக்கு செல்வதாக இருந்த ஆளுநர் அரை  மணி நேரத்திற்கு முன்பாக புறப்பட்டுச் சென்றார். இந்த  போராட்டத்தால் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலான உதகை தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் டெண்டரில் ரூ.1000 கோடி முறைகேடு? அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் கெடு

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!