நேர்மையாக இருப்பதால் ஐடி ரெய்டு கண்டு அஞ்சப்போவதில்லை! தமிழிசைக்கு நடிகர் சத்யராஜ் பதிலடி!

Asianet News Tamil  
Published : Apr 09, 2018, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
நேர்மையாக இருப்பதால் ஐடி ரெய்டு கண்டு அஞ்சப்போவதில்லை! தமிழிசைக்கு நடிகர் சத்யராஜ் பதிலடி!

சுருக்கம்

I am not afraid of IT Raid - Actor Satnyaraj

நாற்பது ஆண்டுகாலமாக நடித்து வருகிறேன் என்றும் நேர்மையாக இருப்பதால் ஐடி ரெய்டு கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் திரைப்பட நடிகர்கள் சார்பில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும்... மூடுங்கள் மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்... தமிழர் உணர்வுகளை மதியுங்கள்... எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம்... ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்.... எந்தக் கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம்... குரல் கொடுங்கள்.. தைரியமுள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என முழக்கம் எழுப்பினார்.

நடிகர் சத்யராஜின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ராணுவத்துக்கு பயப்படாத இந்த நடிகர்கள், வருமான வரித்துறை சோதனைக்கு பயப்படுவார்களா? என மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு தமிழ்த் திரையுலகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலளிக்கும் வகையில், நடிகர் சத்யராஜ், கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வருகிறேன் என்றும் நேர்மையாக இருப்பதால் ஐடி ரெய்டு கண்டு அஞ்சப்போவதில்லை என்று அவர் கூறினார். 

சென்னையில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ், இயக்குநர் செல்வமணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!