அதிமுக அரசு, உரிமைகளை வேறு எங்கோ வைத்திருக்கிறது! பாரதிராஜா ஐயம்!

First Published Apr 9, 2018, 12:23 PM IST
Highlights
Director Bharathiraja Pressmeet


தமிழனாக குரல் கொடுக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை துவக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சத்தியராஜ், டைரக்டர் செல்வமணி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்து வருகின்றனர்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை துவக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இயக்குநர் பாரதிராஜா, எங்கள் பேரவைக்கு வருபவர்கள் இனமானம் காப்பதற்கும், மொழியைக் காப்பதற்கும், எந்த சாயலும் இல்லாமல், தெளிந்த வெள்ளை மனமுடையவர்கள் இந்த பேரவைக்கு வர வேண்டும் என்று கூறினார்.

இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பல சோதனைகள் வந்துள்ளன. திமிட்ழ நிலத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றார். பேரவைக்கு வருபவர்கள் அரசியல் சாயத்தை கலைத்து விட்டு ஒரு தமிழனாக கூடுவதற்காகவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

காவிரி விவகாரததில் தமிழகமே கொந்தளிக்கும்போது ஐபிஎல் போட்டி தேவையா? என்று கேள்வி எழுப்பினார். தமிழக போராட்டத்தை திசை திருப்புவதற்காகவே ஐபியல் போராட்டத்தை வலிந்து நடத்துகிறதோ என்ற ஐயப்பாடு எழுவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டியை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. போட்டியை தள்ளி வையுங்கள் என்றுதான் கூறுகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஐபிஎல் போட்டியை தள்ளி வையுங்கள் என்றார்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் கொள்கை குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, போருக்கு போகிறவன் அதன் வழிமுறைகளைச் சொல்லமாட்டான். ஆனால் போர் வரும் என்று கூறினார்.

அதிமுக அரசு உரிமைகளை வேறு எங்கே வைத்திருப்பதாக ஐயம் எழுவதாகவும் கூறினார். முதலமைச்சரே எங்கள் கட்டுக்கோப்புக்குள் என்று கூறும்போது, நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்க. நாங்கள் எங்கள் கடமையை வெளிப்படுத்துகிறோம் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.

click me!