
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் சப்பை கட்டு கட்டி வந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தான் அதிமுகவுக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவாளன் அல்ல என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் தான் சார்ந்திருக்கும் கட்சியை மறந்து விட்டு டிபிக்கல் சசிகலா குடும்பத்து ஆதரவாளராகவே மாறிவிட்டிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
தொடர்ந்து கூட்டணி கட்சியான திமுகவை எரிச்சல் படுத்தும் விதத்திலும் தான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினை கடுப்பேற்றும் வேலைகளையும் கன கட்சிதமாக செய்து வந்தார் திருநாவுகரசர்.
சசிகலா குடும்பத்திற்கு திருநாவுகரசர் அடித்த ஜால்ராவை கண்டு அரண்டு போன ப.சிதம்பரம், இளங்கோவன், குஷ்பூ, தங்கபாலு, உளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுலிடம் புகார் செய்ததையடுத்து நேரில் அழைத்து கண்டிக்கபட்டார் திருநாவுக்கரசு.
இந்நிலையில், வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உப்பு சத்தியாகிரக 87-ம் ஆண்டு நினைவு நாளையெட்டி அங்குள்ள நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் பேசியதாவது :
டி.டி.வி. தினகரன் மீதான விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். ஒரு கட்சியை பிரிக்கவோ, சேர்க்கவோ அச்சுறுத்தலாக இருக்க கூடாது.
பாரதீய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் விபத்தில் சிக்கி கொள்ளும். நான் அதிமுகவுக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவாளன் அல்ல.
இரட்டை இலை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அவர் யாருக்கு பணம் கொடுக்க முயன்றார்? அந்த அதிகாரி யார்? என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.