அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல... எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Jan 9, 2021, 6:10 PM IST
Highlights

நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன். உழைப்பு, ஒற்றுமை இருந்தால் வெற்றி நிச்சயம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன். உழைப்பு, ஒற்றுமை இருந்தால் வெற்றி நிச்சயம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக பொக்குழு கூட்டத்தில் பேசிய இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி;- சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அதிமுக வெற்றி பெற முடியும். அண்ணா, எம்.ஜி.ஆர்., போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. ஆனால் கட்சிக் கொடுத்தப் பணியைச் சிறப்பாக செய்துகொண்டிருப்பதாக நம்புகிறேன். நான்கு ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததாக நான் நம்புகிறேன்.

 தேர்தலில் திட்டம் போட்டு சரியாக செயல்பட்டால் நமக்கு வெற்றி உறுதி. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைப் பெற வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகளும் மிக முக்கியம்.ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கப் பார்க்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். விவாதத்திற்கு அழைத்தால் எங்கேயோ உள்ள வழக்குகளைத் திரும்பப் பெற கூறுகிறார் ஸ்டாலின். மனமாட்சிமையை மனதில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டு தேர்தலில் வெற்றி பெறுவோம். 

நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன். உழைப்பு, ஒற்றுமை இருந்தால் வெற்றி நிச்சயம். சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தல் மூலமாக வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!