
பச்சோந்தி போல் அடிக்கடி நிறம் மாறுபவன் நான் அல்ல என அமைச்சர் செங்கோட்டையன் ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடச்சூரில் அரசுப் பள்ளி கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பச்சோந்தி போல் அடிக்கடி நிறம் மாறுபவன் தான் அல்ல என்றும் தனது முடிவு எப்போதும் தெளிவாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தனது அரசியல் வயதுகூட இல்லாதவர்கள் தன்னை விமர்சிக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்த அவர், விமர்சிப்பதை நிறுத்திக்கொள்வது அவர்களுக்கு நல்லது என்று எச்சரித்தார்.
நான் செல்கின்ற பாதை சரியாக இருக்கிறதா என்பதை சிந்தித்து செயல்படக்கூடிய நபர் தான் என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சோதனை வந்த போதும் தெளிவாக இருந்ததாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.