திமுக வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய எம்எல்ஏ... ஸ்டாலினை திக்குமுக்காட வைத்த கு.க.செல்வம்..!

By vinoth kumarFirst Published Aug 6, 2020, 12:57 PM IST
Highlights

மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது அல்ல; குடும்ப அரசியல் காரணமாக விலகுகிறேன் என சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கூறியுள்ளார். 
 

மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது அல்ல; குடும்ப அரசியல் காரணமாக விலகுகிறேன் என சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கூறியுள்ளார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர்களில் ஒருவராகவும் இருப்பவர் கு.க.செல்வம். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற போட்டி ஏற்பட்டது. ஆனாலும், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதியின் ஆதரவால் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏ கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இதனை தொடர்ந்து, டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்திற்கு சென்ற திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அவரை சந்தித்து பேசினார். உடனே திமுக பொறுப்புகளில் இருந்து கு.க.செல்வம் விடுவிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். நேற்று பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வத்திற்கு காவி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், திமுக மற்றும் உதயநிதி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இந்நிலையில், திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திமுகவில் இருக்க பிடிக்காததால் தான் பொறுப்புகளை எடுத்துவிடுங்கள் என்றேன். திமுக அனுப்பிய கடிதம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. வந்தவுடன் பதில் அளிப்பேன். எனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது அல்ல; குடும்ப அரசியல் காரணமாக விலகுகிறேன் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வயதாகிவிட்டது, உடல்நிலை சரியில்லை, பணம் இல்லை என என்னை ஒதுக்கிவிட்டார்கள் என கூறியுள்ளார். 

click me!