அரசின் அறிவுரையை கடைபிடித்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Aug 6, 2020, 11:05 AM IST
Highlights

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான வருவாய், ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடைத் துறை கட்டடங்களை கட்ட அடிக்கல் நாட்டினார். ரூ.2.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார். பின்னர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியடிளித்த முதல்வர்;- திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சிறப்பாக பணியை மேற்கொண்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இதுவரை 43,578 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அரசின் அறிவுரையை கடைபிடித்தால் விரைவில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கப்படுகிறது.  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக சுமார் 210 நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தில் பொருளாதார இழப்பை ஈடுகட்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முதல்வர் விளக்கமளித்துள்ளார். 

click me!