கேரளாவில் நான் சுதந்திரமாக சுவாசிப்பேன்; தணிக்கை இல்லை....மத்திய அரசுக்கு ‘குட்டுவைத்த’ நடிகர் பிரகாஷ் ராஜ்

 
Published : Dec 10, 2017, 04:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
கேரளாவில் நான் சுதந்திரமாக சுவாசிப்பேன்; தணிக்கை இல்லை....மத்திய அரசுக்கு ‘குட்டுவைத்த’ நடிகர் பிரகாஷ் ராஜ்

சுருக்கம்

i am free bird in kerala ....actor parakash raj attack central govt

கேரள மாநிலத்தில் நான் சுதந்திரமாக சுவாசிப்பேன், இங்கு தணிக்கை கிடையாது, தடைகள் இல்லை என்று 22-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மத்தியஅரசுக்கு குட்டு வைக்கும் விதமாகப் பேசினார்.

சர்வதேச திரைப்பட விழா

திருவனந்தபுரத்தில் 22-வது கேரள சர்வதேச திரைப்பட விழா கடந்த 8ந்தேதி தொடங்கியது. இது வரும் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்  பேசியதாவது-

தடையில்லை

கேரளாவுக்கு நான் வரும் போது, நான் பேச வேண்டியது குறித்த எந்த குறிப்பும் எடுத்துவரவில்லை. ஏன்ெனன்றால், இங்கு எந்தவிதமான தணிக்கையும் இல்லை. ‘ஐ லவ் யு கேரளா’

ஏனென்றால், நான் சுதந்திரமாக, அச்சமின்றி சுவாசிக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். என்ன நான் பேச முற்பட்டாலும், நான் ஒற்றுமையை நம்புகிறேன், அதைத்தான் நான் பேசுவேன்.

துர்கா பார்

சமீபத்தில் ‘எஸ். துர்கா’ திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், பல மதுக்கடைகளில் ‘துர்கா பார்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது அதை சில அமைப்புகள் கவனிப்பதில்லை.

என்னை இனவாத சக்திகள் மிரட்டும்போது, நான் அவர்களைப் பார்த்து சிரிப்பேன். என்னை அமைதியாக்க முயலும் போது, நான் பாடத் தொடங்குவேன். என்னிடமிருந்து அதிகமாக அதை எடுத்துச் செல்வார்கள்?

எச்சரிக்கை

நாட்டின் இனவாத சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் குரல் அமைதியாகும்போது, அவர்களின் குரல் உரக்க ஒலிக்க தொடங்கிவிடும். அவர்களுக்கு எதிராக கலைஞர்கள் குரல்கொடுக்க வேண்டும்.

 என் கருத்தை நான் தெரிவிக்கிறேன் ஏனென்றால் நான் எந்த கட்சியையும் சாராதவன். ஒரு கலைஞன் என்ற முறையில் எனது குரலை உயர்த்துகிறேன். பொறுப்புள்ள மனிதராக உணர்கிறேன். கலைஞர்கள் தங்களின் புகழுக்காகவும், சமூகத்தை எந்த இடத்தில் இருந்து விரும்புகிறோம் என்பது குறித்த கலைஞர்கள் பேசுவது மிகவும் முக்கியம்.

அச்சப்படக்கூடாது

ராஜஸ்தானில் ஒரு முஸ்லிம் அடித்துகொல்லப்பட்டார். அந்த கொலையைச் செய்தவர் சுந்திரமாகச் செல்கிறார். எந்த விதமான விஷயம் நமக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பது குறித்து நாம் சிந்திப்பது அவசியம்.

நீங்கள் குரலை அமைப்படுத்த முயற்சித்தால், அச்சம் தொடர்ந்து இருக்கும். வருங்காலத் தலைமுறையின் சிந்தனையாளர்கள், சிந்திப்பதற்கே அச்சப்படுவார்கள்.  அப்படி ஏதும் நடக்க விடக்கூடாது. அவர்கள் ஹிட்லராக மறுபிறவி எடுப்பதாகத் தெரிகிறது

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!