அந்த கட்சியின் வெற்றியை தடுக்கவே கேயம்பத்தூரில் போட்டியிடுகிறேன்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு..

By Ezhilarasan BabuFirst Published Mar 27, 2021, 11:24 AM IST
Highlights

மத நல்லினக்கணம் சீர்குலைந்து மிக ஜாக்கிரதையாக திட்டமிட்டு அரசியல் நடந்து கொண்டிருக்கும் ஒரு இடம். அதனால் அங்கே நான் பண்ணியாற்ற வேண்டும். அவர்கள் எப்படியாவது  ஒரு தொகுதியில் வெற்றி பெற்று  விடலாம் என்று நினைக்கிறார்கள். அவற்றை முறியடிக்கவே நான் அங்கு சென்றுள்ளேன். 
 

எங்களை அதிகாரத்தில் விடுங்கள் எதை மூட வேண்டும் எதை திறக்க வேண்டும் என்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கூட்டணி கட்சியின் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஷெரிப்பை ஆதரித்து கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்திலிருந்து பிரச்சாரம் செய்த அவர், இங்கே அடிப்படை ஆதார வசதி கூட பல இடங்களில் இல்லை, இங்கு மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் சுற்றி உள்ளேன். எங்கேயும் இல்லை. போக்குவரத்து வசதி இல்லை, பாதாள சாக்கடை வசதி இல்லை, இந்த நிலை தமிழக முழுவதும் உள்ளது. இவர்கள் ஆண்ட காலம் முழுவதும் இவர்கள் கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என உறுதியாகிறது. 

தலைமை நேர்மையானதாக இருக்க வேண்டும் ஊழல் அடிமட்டத்திலிருந்து சரி ஆக வேண்டும்.  ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு என்றால் மக்கள் வாங்காமல் இருந்தால் நாங்கள் ஏன் பணம் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு மந்திரி  பேசுகிறார். அரசியல் மோசமாக உள்ளது அவை எல்லாம் மாற்ற வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் நேர்மையானவர் வரவேண்டும். கோயம்புத்தூரில் ஏன் நிற்கிறேன் என்று கேள்வி எழுப்புகிறார்கள், நான் கோயம்புத்தூரில் ஏன் வேட்பாளராக இருக்கிறேன் என்றால்,  மத நல்லினக்கணம் சீர்குலைந்து மிக ஜாக்கிரதையாக திட்டமிட்டு அரசியல் நடந்து கொண்டிருக்கும் ஒரு இடம். அதனால் அங்கே நான் பண்ணியாற்ற வேண்டும். அவர்கள் எப்படியாவது  ஒரு தொகுதியில் வெற்றி பெற்று  விடலாம் என்று நினைக்கிறார்கள். அவற்றை முறியடிக்கவே நான் அங்கு சென்று உள்ளேன். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். என்னைப் பார்த்து B-டிம் என்று சொல்கிறார்கள். காந்தி  அவர்களை  தவிர நான் யாருக்கும் பி.டீம்மாக  இருக்க மாட்டேன். காந்தியின் கொள்ளுப்பேரன்  நான் வந்திருக்கிறேன். தமிழகத்தை மீட்டு எடுப்போம் என்பதற்காக. போதிய அளவில் சரியான சாலை வசதிகள் இல்லை, நடைபாதை இல்லை, ஆதார வசதிகள் எல்லாம் எங்குமே இல்லை, தெருவிளக்கு எங்கும் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் கட்டிடங்கள் பாழடைந்து கிடைக்கிறது. அவற்றை எல்லாம் சீரமைக்க வேண்டும். மதுபான கடையை முற்றிலுமாக மூடப்படும், ஏடிஎம் ,பெட்ரோல் பங்க் விட தமிழகத்தில் அதிகமாக மதுபான கடைகள் உள்ளன. 

கொரானா காலகட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், மதுபான கடையை மட்டுமே திறந்து இருந்தது.எங்களை அதிகாரத்துக்கு விடுங்கள் எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எந்த கடையை மூட வேண்டும் என்பதை நாங்கள் செய்கிறோம்.மற்றவருக்கு வரும் கூட்டமெல்லாம்  பிரியாணியும் , பணமும், கோட்டருக்கும். எனக்கு வருவது  நேர்மையான கூட்டங்கள். இந்த கூட்டம் தான் ஆட்சி அதிகாரத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் கையில் கொடுக்கும். சட்டமன்றத்தில் எங்களுடைய குரல் இருக்கவேண்டும் என்றால். உங்களுடைய சின்னம் டார்ச்லைட். நாளை நமதே நாளை நமதே. இவ்வாறு அவர் பேசினார்.  

 

click me!