திமுகவை அண்ணா நகரில் அலறவிடும் அதிமுக.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய கோகுல இந்திரா..

Published : Mar 27, 2021, 10:39 AM IST
திமுகவை அண்ணா நகரில் அலறவிடும் அதிமுக.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய கோகுல இந்திரா..

சுருக்கம்

தான் வெற்றி பெற்றவுடன் கண்டிப்பாக அண்ணா நகரில் அரசு கலை கல்லூரி அமைக்கவும்,பட்டா கோரி காத்திருக்கும் மக்களின் பிரச்சினையை சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளியத்துள்ளார்.

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா தான் வெற்றி பெற்றவுடன் அண்ணா நகரில் அரசு கலை கல்லூரி அமைக்கவும், பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன் என தெறிவித்துள்ளார். தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈட்பட்ட அவர் இவ்வாறு கூறினார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக சார்பில் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அத்தொகுதிக்கு உட்பட்ட  அன்னை சத்யா நகர், அம்பேத்கர் காலணி, கிருஷ்ணா காலணி, லோட்டஸ் காலணி, விக்டரி காலணி, உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு வீடாக நடந்து சென்று இரட்டை இலை வாக்களிக்க கோரினார். 

இதற்கிடையே பேட்டியளித்த கோகுல இந்திரா, கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, மக்களை சந்திக்கக் கூட இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருப்பதாகவும், தான் வெற்றி பெற்றவுடன் கண்டிப்பாக அண்ணா நகரில் அரசு கலை கல்லூரி அமைக்கவும், பட்டா கோரி காத்திருக்கும் மக்களின் பிரச்சினையை சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளியத்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் தமிழக விசிட்...! அதிமுக-பாஜகவுக்கு திமுக தரப்போகும் ட்விஸ்ட்..!
ஆளுநரை அவமதிக்க திட்டமிட்டே எழுதி கொண்டு வந்த ஸ்டாலின்..! இபிஎஸ் ஆத்திரம்..!