தமிழக தலைவர்களின் அனுமதியுடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்டுத்தப்படும் ! அதிர வைத்த மத்திய அமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Jul 2, 2019, 7:46 AM IST
Highlights

மாநில அரசுகளின் அனுமதியின்றி மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாது என நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மூத்த அரசியல் கட்சித் தலைவர்களின்  அனுமதியுடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் செய்லபடுத்தப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள், வேதாந்தா நிறுவனம் ஆகியவை இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. இதை எதிர்த்து டெல்டா பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில், திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்டா விவசாயிகள் பிரச்சினை குறித்து இன்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் பேசிய டி.ஆர்.பாலு, காவிரி டெல்டா விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கதிராமங்கலம், நெடுவாசல் கிராமங்கள் வெயில், மழை என்று பாராமல் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
நான் பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு நேரடியாக ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா முழுதும் எண்ணெய் இருக்கிறது என்று சகட்டுமேனிக்கு கிணறுகளைத் தோண்டுகிறீர்கள், குழாய்களை பதிக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் இறங்குவதற்கு முன் அந்த மண்ணை பற்றிய புள்ளி விவரங்கள் உங்களிடம் இருக்கிறதா? டெல்டாவின் நிதி தொடர்பான தரவுகள், டெல்டாவின் சமூக பொருளாதார தரவுகள் உங்களிடம் இருக்கிறதா?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து  மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் மக்களைத் திரட்டி மத்திய அரசை எதிர்த்து கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்ப் பேசிய  பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அரசு யார் மீதும் எதையும் திணிப்பதில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உங்கள் கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் இருக்கின்றன. 

தமிழகத்தின் மூத்த தலைவர்களை  அழைத்துக் கொண்டு வாருங்கள். இதுபற்றி பேசுவோம், விவாதிப்போம். அவர்களின் ஒப்புதலுடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

click me!