விச பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொலை செய்த கணவன் கொடுத்த பகீர் வாக்கு மூலம்.!! கேரளாவில் நடந்த கொடூர சம்பவம்

Published : May 25, 2020, 11:01 AM IST
விச பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொலை செய்த கணவன் கொடுத்த பகீர் வாக்கு மூலம்.!! கேரளாவில் நடந்த கொடூர சம்பவம்

சுருக்கம்

கேரளாவில் விசப்பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வந்து மனைவியை இரண்டு முறை கடிக்க விட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் கொல்லம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவில் விசப்பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வந்து மனைவியை இரண்டு முறை கடிக்க விட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் கொல்லம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா.இவருக்கு வயது 25. கணவனிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் உண்மையை சூரஜ் ஒப்புக்கொண்டார்.
கடந்த 7 ஆம் தேதி கொல்லத்தின் அனச்சலில் இருக்கும் இல்லத்தில் உத்ரா என்பவர் பா ம்பு கடியால் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே, இதற்கு முன்பு பாம்பு கடியில் இருந்து உ யிர் தப்பிய இவரை மீண்டும் பாம்பு கடித்ததால் இது குறித்து பெண்ணின் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி உத்ராவை எப்படி கொலை செய்தேன் என்று விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் சொல்லும் போது... "சூரஜ் அறிமுகமான நபர் ஒருவரிடமிருந்து வியஷப் பாம்பு ஒன்றை வாங்கி உத்ராவை கடிக்க வைத்துள்ளார். இ தற்காக சில பாம்பு பிடிப்பவர்களிடமிருந்து இரண்டு பாம்புகளை சுமார் 10,000 ரூபாய்க்கு வாங்கிய ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, விசாரணையின் போது, ​​சூரஜுக்கு பாம்புகளை கையாள்வதில் முன் அ னுபவம் இருப்பதும், கடந்த மூன்று மாதங்களில் யூடியூபில் பல முறை பாம்புகள் குறித்து ஆய்வு செய்ததும் கண்டறியப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி பாம்புகளை கையாளும் சுரேஷ் என்பவரிடம் இருந்து சூரஜ் பாம்பை வாங்கியிருக்கிறார்.

அதன்பின் அந்த பாம்பை பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் வைத்து தனது வீட்டில் உத்ரா இருக்கும் நேரத்தில் வெளியில் விட்டுள்ளார். அந்த சமயம் உத்ரா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிசயமாக உயிர் தப்பினார்.
இதையும் சூரஜ் தான் பிளான் போட்டு செய்துள்ளார். அந்த சமயத்தில் பாம்பைக் கண்டு உத்ரா சத்தமிட்டதால், அவர் பாம்பை விரட்டுவது போன்று நடித்துள்ளார். அதன் பின் காலை வரை உத்ரா அருகிலே தங்கியுள்ளார்.

அதன்பின் பாம்பு கடித்தது குறித்து குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களிடம் எச்சரிக்க, அ ந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது.இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சூராஜ், சுரேஷ் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!